தேசிய மூலிகை தாவர வாரியம் (NMPB)


2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய மூலிகை தாவர வாரியம் (நேஷனல் மெடிஸினல் பிளான்ட் போர்டு: என் எம் பி பி ), நாடு முழுவதும் மூலிகை தாவரத் துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய அமைப்பாகும். பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளுக்கிடையே பயனுள்ள ஒருங்கிணைப்புக்கான சரியான வழிமுறைகளை மேம்படுத்துவதும், மூலிகை தாவரங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கொள்கை / திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் இவ்வாரியத்தின் குறிக்கோள் ஆகும்.

என் எம் பி பி வட்டார மையங்களை அமைத்தல்


திட்டங்களின் பயனுள்ள ஒருங்கிணைப்புக்காக, வட்டார மையங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டன. கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் (KFRI) பீச்சியில் வட்டார வழிவகை மையம்– தெற்கு வட்டாரம்(NMPB-RCFC-Southern Region) அமைந்துள்ளது.

என் எம் பி பி வட்டார வழிவகை மையம் (தெற்கு வட்டாரம்) நோக்கம்


கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் யூனியன் பிரதேசங்களான லக்ஷ்தீப், பாண்டிச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கிய தெற்கு வட்டாரத்தில் உள்ள மூலிகை தாவரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்களுக்கு அளிப்பதாகும்.

திட்ட பங்குதாரர்கள்

மருத்துவ தாவரத் தொகுப்பு

என் எம் பி பி வட்டார வழிவகை மையம் (தெற்கு வட்டாரம்) குறிக்கோள்கள்

  • என் எம் பி பி வட்டார வழிவகை மையம் (தெற்கு வட்டாரம்) குறிக்கோள்கள்

  • தெற்கு வட்டாரத்தில் என் எம் பி பி-இன் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்தல்.

  • மூலிகைத்தொழில் சார்ந்த நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தெற்குவட்டாரத்தில் அதன் நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க உறுதியளித்தல்.

  • தரமான நடவுபொருட்கள் (Quality Planting Material QPMs), பயிர்ச்செய்கை, பாதுகாப்பு, அறுவடை, அரைச்செயலாக்கு , மதிப்புகூட்டுதல், சேமிப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு ஆகியவற்றை

  • பங்குதாரர்களிடையே வளர்ப்பதன் மூலம் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பதிறன்களை உருவாக்குதல்.

  • பயிற்சி, பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டங்களை நடத்துவதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்குதல்.

  • ஆபத்திற்குட்பட்ட அதிக தேவையுள்ள தாவரங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் வட்டார அளவில் தரமுள்ள நடவுப்பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்துதல்.

  • மூலிகை தாவர உற்பத்திகளின் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல்.